அலகு 9 : கரைசல்கள் - Online Test

Q1.

250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி

Answer : Option D
Explaination / Solution:

W2 = 1.8 .கி W1 = 250 கி = 0.250 கி.கி

M2 = 180 கி மோல்‒1


m = 1.8 / 180 × 0.250 = 0.04m


Q2.

பின்வரும் செறிவு அலகுகளில், வெப்பநிலையை சார்ந்து அமையாதவை எவை?

Answer : Option D
Explaination / Solution:

வெப்பநிலையை பொறுத்து கனஅளவு மாறுவதால், மோலாரிட்டி வெப்பநிலையை சார்ந்து அமைகிறது; M = n/v

Q3.

வயிற்றில் சுரக்கும், நீர்த்த HCl அமிலத்தை அலுமினியம் ஹைட்ராக்சைடு கொண்டு நடுநிலையாக்க முடியும்

Al (OH)3 + 3HCl (aq) → AlCl3 + 3 H2O

21 mL கனஅளவுடைய 0.1M HCl நடு நிலையாக்குவதற்கு தேவைப்படும், 0.1 M Al(OH)3 கரைசலின் கனஅளவு

Answer : Option B
Explaination / Solution:

N = M × காரத்துவம்;

N = M × அமிலத்துவம்;

0.1 M HCl = 0.1 × 1 = 0.1 N HCl = N1

0.1 M Al (OH)3 = 0.1 × 3

= 0.3 NAl (OH)3 = N2

HCl கனஅளவு V1 = 21 mL;

Al(OH)3 கனஅளவு V2

V1N1 = V2N2 ; V2 = V1N1 / N2 = [21× 0.1] / 0.3 = 7mL


Q4.

காற்றில் உள்ள நைட்ரஜனின் பகுதி அழுத்தம் 0.76 atm மற்றும் 300K வெப்பநிலையில் அதன் ஹென்றி விதி மாறிலி மதிப்பு 7.6 × 104 atm. 300 K வெப்பநிலையில், காற்றை நீரின் வழியாக குமிழிகளாக செலுத்தும்போது, கிடைக்கும் கரைசலில், நைட்ரஜன் வாயுவின் மோல் பின்ன மதிப்பு என்ன?

Answer : Option D
Explaination / Solution:

PN2 = 0.76 atm ; 

KH = 7.6 × 104 × ?

P N2 = KH . x ; 

x = Pn2 / KH = 0.76 / 7.6 × 104

x = 1 × 10‒5


Q5.

350 K வெப்பநிலையில் நீரில், நைட்ரஜன் வாயுவின் கரைதிறனுக்கு ஹென்றி விதி மாறிலி மதிப்பு 8 × 104 atm. காற்றில் நைட்ரஜனின் மோல் பின்னம் 0.5 ஆகும். 350K வெப்பநிலை மற்றும் 4 atm அழுத்தத்தில் 10 மோல்கள் நீரில் கரையும் காற்றிலுள்ள நைட்ரஜனின் மோல் எண்ணிக்கை 

Answer : Option D
Explaination / Solution:

KH = 8 × 104 ; (Xn2) காற்றில் = 0.5

மொத்த அழுத்தம் = 4 atm

நைட்ரஜனின் பகுதி அழுத்தம் = மோல் பின்னம் × மொத்த அழுத்தம் = 0.5 × 4 = 2

(Pn2) = KH × கரைசலில் N2 ன் மோல் பின்னம்



Q6.

நல்லியல்புக் கரைசலுக்கு பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தவறானது

Answer : Option D
Explaination / Solution:

நல்லியல்பு கரைசலுக்கு,

∆Sகலத்தல் ≠ 0; எனவே ∆Gகலத்தல் 0

தவறானது ∆Gகலத்தல் = 0


Q7.

பின்வருவனவற்றுள் எந்த ஒரு வாயுவானது மிகக்குறைந்த ஹென்றி விதி மாறிலி மதிப்பைப் பெற்றுள்ளது?

Answer : Option C
Explaination / Solution:

கார்பன் டை ஆக்ஸைடு, அதிக அளவு நிலைப்புத் தன்மையுடைய வாயு மேலும் குறைவான ஹென்றி விதி மாறிலியை உடையது.


Q8.

ஒரு இருகூறு நல்லியல்புக் கரைசலில், தூய திரவக் கூறுகள் 1 மற்றும் 2 இன் ஆவிஅழுத்தங்கள் முறையே P1 மற்றும் P2 ஆகும். x1 என்பது கூறு 1 இன் மோல் பின்னம் எனில், கூறுகள் 1 மற்றும் 2 ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கரைசலின் மொத்த அழுத்தம்

Answer : Option C
Explaination / Solution:

X1 + X2 = 1

X1 = 1 – X2

 Pமொத்தம் = P1 + P2

= P1 X1 + P2X 2

= P1 (1 ‒ X 2) + P2X 2

= P1 – P1X 2 + P2X 2

= P1 – X2 (P1 – P2 )


Q9.

கரைசலின் சவ்வூடு பரவல் அழுத்தத்தை (π) தரும் சமன்பாடு

Answer : Option B
Explaination / Solution:

π = CRT

π = n / V RT; 

πV = nRT


Q10.

பின்வரும் இருகூறு திரவ கலவைகளில் எது, ரௌல்ட் விதியிலிருந்து நேர்குறி விலக்கத்தை காட்டுகிறது?

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.