அலகு 6 : வாயு நிலைமை - Online Test

Q1.

வாண்டர் வால்ஸ் மாறிலிகள் b மற்றும் a யின் அலகுகள் முறையே

Answer : Option C
Explaination / Solution:

an2/V2 = atm

a = atm L2/mol2 = L2mol−2atm

nb = L

b = L/mol = L mol−1


Q2.

கூற்று: CO2 வின் நிலைமாறு வெப்பநிலை 304 K. இதனை அதிக அழுத்ததிற்கு உட்படுத்தி 304 Kக்கு மேல் திரவமாக்க முடியும்.

காரணம்:‒ மாறாத வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள நிறையுள்ள வாயுவின் கனஅளவு அதன் அழுத்தத்திற்கு நேர்விகிதத்தில் அமையும்

Answer : Option D
Explaination / Solution:

சரியான கூற்றுகள்

1. CO2ன் மதிப்பு நிலைமாறு வெப்பநிலை 304K. இதனை எவ்வளவு அழுத்தம் அளிக்கப்படினும், 304Kக்கு மேல் திரவமாக்க இயலாது.

2. மாறாத வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள நிறையுள்ள வாயுவின் கனஅளவு அதன் அழுத்தத்திற்கு எதிர் விகிதத்தில் அமையும்.


Q3.

227° C யில் 5.00 atm அழுத்தத்திலுள்ள N2 வாயுவின் அடர்த்தி என்ன?

Answer : Option C
Explaination / Solution:

d = PM/RT


d = 3.14 g L−1


Q4.

கீழ்கண்டவற்றுள் குறிப்பிட்ட எடையுள்ள நல்லியல்பு வாயுவின் பண்புகளைக் சரியாகக் குறிக்கும் படம் எது

Answer : Option C
Explaination / Solution:

ஒரு குறிப்பிட்ட நிறையுடைய நல்லியல்பு வாயுவிற்கு

V α T

P α 1/ V

மற்றும் PV = மாறிலி


Q5.

25 கிராம் நிறையுள்ள கீழ்கண்ட வாயுக்கள் 27°யில் 600 mm Hg அழுத்தத்தில் எடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குறைந்த கனஅளவு கொண்ட வாயு எது?

Answer : Option D
Explaination / Solution:

கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 

கனஅளவு α மோல்களின் எண்ணிக்கை 

கனஅளவு α நிறை / மோலார் நிறை 

கனஅளவு α 25 / மோலார் நிறை

அதாவது மோலார் நிறை அதிகம் எனில், கனஅளவு குறைவு எனவே HI ஆனது குறைவான கன அளவைப் பெற்றுள்ளது.