இரண்டு குட்டையான
சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே 1.20 Am2 மற்றும் 1.00 Am2 ஆகும்.
இவை ஒன்றுக்கொன்று இணையாக
உள்ளவாறு அவற்றின் வடமுனை,
தென்திசையை நோக்கி இருக்கும்படி
கிடைத்தள மேசை மீது
வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு
குட்டை காந்தங்களுக்கும் காந்த
நடுவரை (Magnetic equator) பொதுவானதாகும்.
மேலும் அவை 20.0cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்விரண்டு காந்தமையங்களையும் இணைக்கும்
கோட்டின் நடுவே O புள்ளியில்
ஏற்படும் நிகர காந்தப்புலத்தின்
கிடைத்தள மதிப்பு என்ன?