அலகு 20 : இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில் நுட்பவியல் - Online Test

Q1. கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:

கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா ஒரு அல்லோ டெட்ராபிளாய்டு (4n) ஆகும்

Q2. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை சடுதிமாற்றம் எனப்படும்.
Answer : Option B
Explaination / Solution:

இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை பன்மய பயிர்ப் பெருக்கம்.

Q3. உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித் தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே தூய வரிசை எனப்படும்
Answer : Option B
Explaination / Solution:

உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன் எனப்படும்.

Q4. இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. 'கோல்டன் ரைஸ்' ஒரு கலப்புயிரி
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்குள் நடைபெறும் கருவுறுதலாகும்.
Answer : Option B
Explaination / Solution:

செயற்கை கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே நடைபெறும் கருவுறுதலாகும்

Q8. DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப்பட்டது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும்.
Answer : Option B
Explaination / Solution:

மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகளை குறிக்கும்

Q10.

கூற்று: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும்.

காரணம்: கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.