i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில்
தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
ii) 1831 ‒ 1832 ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன் கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக்
கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
iii) 1855 ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
iv) 1879 ஆம் ஆண்டில் சாந்தலர்கள்
வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின்
மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.
ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை
எட்டுவதே மிததேசியவாத
காங்கிரஸ் தலைவர்களின்
குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும்
தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக்
கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.
கூற்று : இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
காரணம் : இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக்
கையாண்டனர்.
கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.